ADDED : செப் 20, 2024 03:39 AM
புதுச்சேரி: ஆசிரியரை பீர் பாட்டி லால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, சண்முகாபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன்; புதுச்சேரியில் தனியார் பள்ளி ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் இரவு இ.சி.ஆர்., வழியாக காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். கொக்கு பார்க் அருகே சென்ற போது, பைக்கில் சென்ற சுப்பையா நகரை சேர்ந்த சதீஷ், மகேஷ், ஹிலால் ஆகிய மூவரும் காரை உரசியது போல, சென்றனர்.
ஏன் வேகமாக செல்கிறீர்கள் என, வேல்முருகன் கேட்டார். ஆத்திரமடைந்த, மூவரும் சாலையில் கிடந்த பீர் பாட்டிலால், அவரை தாக்கினர். படுகாயமடைந்த, வேல்முருகன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து, அவரது மனைவி சுனில்ராம் பிரிசில்லா கொடுத்த புகாரின் பேரில், டி. நகர் போலீசார் வழக்கு பதிந்து, சதீஷ், 24; மகேஷ், 20; ஆகியோரை கைது செய்தனர். மேலும், ஹிலால் என்பவரை தேடி வருகின்றனர்.