/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வட மாநில தொழிலாளியை தாக்கிய இருவருக்கு வலை
/
வட மாநில தொழிலாளியை தாக்கிய இருவருக்கு வலை
ADDED : ஜூலை 29, 2025 07:16 AM
புதுச்சேரி : சேதராப்பட்டு, பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் குணசேகரன், அரசு பொது மருத்துவமனை ஊழியர். இவருக்கு சொந்தமாக பூக்கார வீதியில் உள்ள வீட்டில் வட மாநிலத்தை சேர்ந்த ஹரி வெங்கடா, 22; என்பவர் வாடகைக்கு தங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 27ம் தேதி இரவு ஹரி வெங்கடா உணவு வாங்கிக் கொண்டு வரும்போது, அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன்கள் சதீஷ் 25, ஹரிஹரன் 24 ஆகியோர் ஹரி வெங்கடாவை வழி மறித்து தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், பணம் கேட்டு தாக்கியுள்ளனர்.
இதையடுத்து, குணசேகரனின் மனைவி முனியம்மாள் வாடகைக்கு இருப்பவரை தாக்கியது தொடர்பாக சதீஷ், ஹரிஹரன் ஆகியோரிடம் கேட்டபோது, அவரையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
இதுகுறித்து முனியம்மாள் அளித்த புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் சதீஷ், ஹரிஹரன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.