ADDED : நவ 25, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்காலில் குடிபோதையில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் கோட்டுச்சேரி போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப்பணியில் ஈடுப்பட்ட போது கோட்டுச்சேரி கிழக்கு தெருவில் பொதுமக்களுக்கு இடையூறாக குடிபோதையில் ஆபாசமாக பேசிய இருவரை பிடித்து விசாரித்தனர்.
இதில அவர்கள் காரைக்கால்மேடு சுனாமி நகரை சேர்ந்த காந்தன் 18,சுனாமி நகர் குறுக்குத்தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன், 22; எனத் தெரியவந்தது. போலீசார் இருவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.