/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.எஸ்.எம்.இ., மையத்தில் இரண்டு நாள் பயிற்சி முகாம்
/
எம்.எஸ்.எம்.இ., மையத்தில் இரண்டு நாள் பயிற்சி முகாம்
எம்.எஸ்.எம்.இ., மையத்தில் இரண்டு நாள் பயிற்சி முகாம்
எம்.எஸ்.எம்.இ., மையத்தில் இரண்டு நாள் பயிற்சி முகாம்
ADDED : ஜன 30, 2024 06:39 AM

புதுச்சேரி, : புதுச்சேரி எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையத்தில், மேம்பாடு மற்றும் 5 எஸ் முறைகளை மையமாக கொண்ட இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
புதுச்சேரி எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையம், ஜப்பானின் வெளிநாட்டுதொழில்நுட்பஒத்துழைப்பு மற்றும் நிலையான கூட்டாண்மை நிறுவனம் இணைந்து புதுமையான தொழில்நுட்ப பயிற்சி திட்டங்களை அளித்து வருகின்றது. இதன் ஒருபகுதியாக, புதுச்சேரி எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையத்தில், மேம்பாடு மற்றும் 5 எஸ் முறைகளை மையமாகக் கொண்ட இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
இதில்,புதுச்சேரி எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையத்தின் தலைவர் அமித் நைன், புதுச்சேரி எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையத்திற்கும், ஜப்பானின் வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இடையேயான தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் உறவுகள் குறித்து விவரித்தார்.
மேலும், இந்தக் கூட்டிணைவு மூலம், நீண்ட காலத்திற்கு ஜப்பானியத் தொழில்நுட்ப நிபுணத்துவத்தின் அறிவுப் பூர்வமான வளங்களைப் பரிமாறிப் பயன்படுத்த உள்ளது எனப் பேசினார்.
பயிற்சியில், முதல்கட்டமாக ஜப்பானில் இருந்து அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் பங்கேற்று,உற்பத்தித் திறனை மேம்படுத்துவது குறித்த பயிற்சியை அளித்தனர்.
இது உள்ளூர் நிறுவனங்களுக்குக் குறிப்பிடத்தக்க பல நன்மைகளை வழங்குவதுடன், ஜப்பானியபயிற்சியாளர்களின் நிபுணத்துவத்தை மேலும் மேம்படுத்த வாய்ப்பாக அமைந்தது.