/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இருவரிடம் ரூ. 18.10 லட்சம் மோசடி
/
இருவரிடம் ரூ. 18.10 லட்சம் மோசடி
ADDED : பிப் 17, 2024 04:46 AM
புதுச்சேரி புதுச்சேரியில் பெண் உட்பட இருவரிடம் ஆன்லைன் மூலம் ரூ. 18.10 லட்சம் பணம் மோசடி செய்த மர்ம கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை சேர்ந்த ரமேஷ், 70; இவருக்கு மொபைல் போனில் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, ஆன்லைனில், முதலீடு செய்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி அவர், தனது வங்கி கணக்கில் இருந்து ரூ. 15.50 லட்சம் பணத்தை அனுப்பி ஏமாந்துள்ளார்.
அதே போல, முத்திரையர்பாளையத்தை சேர்ந்த கார்குழலி, 27; இவரிடம் ஒருவர் பிரபல தனியார் நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறினார். அதற்காக பணம் அனுப்புமாறு கேட்டுள்ளார். கார்குழலி தனது வங்கி கணக்கில் இருந்து ரூ. 2.60 லட்சத்தை அனுப்பினார். இதற்கு பின் அந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ள முடியவில்லை.
புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம கும்பலை தேடிவருகின்றனர்.