/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இரு பெண்களிடம் ரூ. 2.21 லட்சம் மோசடி
/
இரு பெண்களிடம் ரூ. 2.21 லட்சம் மோசடி
ADDED : மார் 03, 2026 04:11 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 2 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 2.21 லட்சம் இழந்துள்ளனர்.
புதுச்சேரி, அபிேஷகப்பாக்கத்தை சேர்ந்த பெண்ணை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுதி நேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என தெரிவித்துள்ளார். அதை நம்பி, மர்ம நபர் அனுப்பிய ஆன்லைன் வர்த்தக லிங்கில் பல்வேறு தவணைகளாக ரூ. 1 லட்சத்து 46 ஆயிரம் முதலீடு செய்துள்ளார்.
அதன் மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன் பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதுபோல், திலாஸ்பேட்டையை சேர்ந்த பெண் 75 ஆயிரம் என 2 பெண்கள் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 2 லட்சத்து 21 ஆயிரம் ஏமாந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

