ADDED : ஜூன் 12, 2026 08:46 AM
அ நிறம் | அளவு
வில்லியனுார்: சேதராப்பட்டில் டிராக்டர் மோதி ஸ்கூட்டரில் சென்ற டைலர் இறந்தார்.
லாஸ்பேட்டை, பெத்துசெட்டிப்பேட்டை சேர்ந்தவர் பாலன், 51; டைலர். இவர், மைலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, மீண்டும் தனது டி.வி.எஸ்., ஜூபிட்டர் ஸ்கூட்டரில் நேற்று காலை 8:00 மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
சேதராப்பட்டு அருகே வந்தபோது, அவ்வழியாக பின் தொடர்ந்து வந்த டிராக்டர், ஸ்கூட்டர் மீது மோதியது. பாலன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
