ADDED : செப் 28, 2026 10:55 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப் பள்ளியில் உல்லாஸ் தேர்வு நடந்தது.
மத்திய அரசின் புதிய எழுத்தறிவு திட்டத்தின் கீழ், பள்ளி படிப்பை தவறவிட்ட 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டு அவர்களுக்கான தேர்வு நடந்தது.
தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த தேர்வினை வட்டம் 1 பள்ளித் துணை ஆய்வாளர் அனிதா துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியை கீதா,பள்ளி மேலாண்மை குழு தலைவர் நாகராஜன், தன்னார்வல ஆசிரியர் நித்தியா ஆகியோர் தேர்வினை நடத்தினர். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
