தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின் கம்பங்களை ஆய்வு செய்ய விக்னேஷ்கண்ணன் கோரிக்கை

மின் கம்பங்களை ஆய்வு செய்ய விக்னேஷ்கண்ணன் கோரிக்கை

மின் கம்பங்களை ஆய்வு செய்ய விக்னேஷ்கண்ணன் கோரிக்கை


ADDED : செப் 28, 2026 10:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 10:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ‘அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்ற வேண்டும்’ என விக்னேஷ்கண்ணன் தெரிவித்தார்.

கவர்னர் மாளிகையில் மனு அளித்துவிட்டு அவர் அளித்த பேட்டி:

கடற்கரை சாலையில் பழுதடைந்த மின்விளக்கு கம்பம் சாய்ந்து, 5 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. இதுகுறித்து கவர்னரை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். ஆனால் நேரம் கிடைக்காதது வருத்தமளிக்கிறது.

பழுதடைந்த மின்கம்பம் எந்த துறைக்கு சொந்தமானது என்பதில் மாறி, மாறி கை காட்டுகின்றனர். எந்த துறையின் அலட்சியத்தால் குழந்தையின் உயிர் பறிபோனது என்பதை கண்டறிய விசாரணை குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பழுதடைந்த மின் கம்பங்கள் உள்ளன. அவை எப்போது சாய்ந்து விழும் என்பது தெரியவில்லை. அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரண தொகை அறிவிக்க வேண்டும். சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லை என்றால் மக்களை திரட்டி போராடுவேன்

இவ்வாறு அவர் கூறினார்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us