ADDED : செப் 04, 2026 11:23 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, செயின்ட் தெரேஸ் வீதியில் உள்ள அரங்க ராமானுஜர் பஜனை மடத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத அத்தி அனந்தரங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் உறியடி உற்சவம் நேற்று நடந்தது.
இதையொட்டி, காலை 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:15 மணிக்கு சுவாமி அலங்கார தரிசனம், ராதா கிருஷ்ண பிருந்தவான வைபவம், கீழ் அக்ராஹாரம் பெரியாழ்வார் பஜனை மண்டலி, இரவு 7:00 மணிக்கு உறியடி உற்சவம் நடந்தது.
விழாவில் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சிவா, உருளையான்பேட்டை தொகுதி தி.மு.க., பொறுப்பாளர் கோபால் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
