sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

'வாட்ஸ் ஆப்' எண் மூலம் புகார் உழவர்கரை நகராட்சி அறிவுறுத்தல்

/

'வாட்ஸ் ஆப்' எண் மூலம் புகார் உழவர்கரை நகராட்சி அறிவுறுத்தல்

'வாட்ஸ் ஆப்' எண் மூலம் புகார் உழவர்கரை நகராட்சி அறிவுறுத்தல்

'வாட்ஸ் ஆப்' எண் மூலம் புகார் உழவர்கரை நகராட்சி அறிவுறுத்தல்


ADDED : ஜூன் 22, 2025 02:25 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியின் குறைகளை வாட்ஸ் ஆப் மூலம் தெரியப்படுத்தலாம்.

உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று குப்பைகள் சேகரித்தல், உட்புற கால்வாய்களை துார்வாரி சுத்தம் செய்தல், கொசு மருந்து தெளித்தல் போன்ற சுகாதார நடவடிக்கைகளில் தினந்தோறும் ஈடுபட்டு வருகிறது. மேலும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உட்புற சாலைகள், கால்வாய், பொதுகழிப்பிடங்கள், மற்றும் பூங்காக்கள் போன்றவற்றை கட்டமைத்தல் மற்றும் அவற்றை பராமரித்தல் போன்ற நடவடிக்கைளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இவற்றில் ஏதேனும் புகார்கள், ஆலோசனைகள் இருந்தால் அதனை குறுஞ்செய்தி, புகைப்படம், வீடியோ, ஆடியோ பதிவின் மூலம் நகராட்சியின் 7598171674 வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பவும். அல்லது 0413-2200382 என்ற கட்டுபாட்டு அறை எண்ணிற்கு தெரியபடுத்தவும்.

இவ்வாறு பெறப்படும் புகார்கள் ஆலோசனைகள் அதன் தன்மையை பொருத்து குறிப்பிட்ட காலக்கெடு மற்றும் அதன் செலவினங்களுக்கு ஏற்றவாறு அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நகராட்சியின் தினசரி நடவடிக்கைகளை Oulgaret Municipality என்ற பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மற்றும் யூடியூப் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம். நகராட்சியின் சேவைகளை பயன்படுத்திக்கொள்ள வாட்ஸ் ஆப் எண்ணை பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us