/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாணரப்பேட்டை ரயில்வே கேட் இன்று மூடல்
/
வாணரப்பேட்டை ரயில்வே கேட் இன்று மூடல்
ADDED : பிப் 04, 2025 05:48 AM
புதுச்சேரி: வாணரப்பேட்டை ரயில்வே கேட் தண்டவாளம் மாற்றும் பணிக்காக இன்று(4ம் தேதி) மூடப்படுகிறது.
புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து சின்ன பாபுசமுத்திரம் ரயில் நிலையம் வரையிலான ரயில்பாதையில், பழைய இரும்பு தண்டவாளங்கள் அகற்றப்பட்டு, புதிய தண்டவாளங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இதற்காக, நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு புதுச்சேரி- கடலுார் சாலை, முதலியார்பேட்டை ஏ.எப்.டி., ரயில்வே கேட் முன் அறிவிப்பு இன்றி திடீரென மூடப்பட்டு ரயில் தண்டவாளங்கள் மாற்றும் பணி துவங்கியது.
அதே போல் ரயில்பாதை தண்டவாளம் மாற்றும் பணி காரணமாக இன்று (4ம் தேதி) காலை 11:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை வாணரப்பேட்டை ரயில்வே கேட் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி ரயில்வே நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளது.