/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிேஷக விழா
/
வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : பிப் 12, 2026 04:42 AM

புதுச்சேரி: முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிேஷக விழாவில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
முதலியார்பேட்டை, மார்க்கெட் வீதியில் உள்ள வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 8ம் தேதி சுதர்சன ஹோமத்துடன் விழா துங்கியது. அதனை தொடர்ந்து, 9ம் தேதி முதல் கால யாக ஹோமங்கள் தொடர்ந்து, இரண்டாம் கால திருவாராதனம் ேஹாமங்கள், 10ம் தேதி 3ம் மற்றும் 4ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
முக்கிய நிழ்வான நேற்று (11ம் தேதி) காலை திருப்பள்ளி எழுச்சி, சுப்ரபாதம், கோ அச்வ பூஜை, 5ம் கால யாகசாலை மற்றும் திருவாராதனம், சதுஸ்தான பூஜை நடந்தது. தொடர்ந்து, மஹா பூர்ணா ஹூதி, யாத்ரா தானத்தை அடுத்து, வேத நாத நாம கீத வாத்தியங்கள் முழங்க, காலை 11:20 மணிக்கு, கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகமும் நடந்தது.
விழாவில், எம்.எல்.ஏ.,க்கள் சம்பத், செல்வம், முன்னாள் அமைச்சர் கந் தசாமி முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பெருமாள் சாமிக்கு, அபிேஷகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் திருப்பணிக்குழு மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செ ய்திருந்தனர்.

