/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீசிடம் வாக்குவாதம் வீடியோ வைரல்
/
போலீசிடம் வாக்குவாதம் வீடியோ வைரல்
ADDED : நவ 04, 2024 05:35 AM
புதுச்சேரி: மணல் கடத்தல் வண்டிகள் குறித்து விசாரிக்க தமிழகப் பகுதிக்கு சென்ற புதுச்சேரி போலீசாரிடம் சிலர் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
புதுச்சேரி எல்லைப் பகுதியில் உள்ள திருக்கனுார் பகுதி தமிழகம் மற்றும் புதுச்சேரியை இணைக்கும் வகையில் பூலோக ரீதியாக இணைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக பகுதியான கொடுக்கூர் சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்திக் கொண்டு புதுச்சேரி வழியாக மாட்டு வண்டிகள் வந்துள்ளன.
அப்போது, ரோந்து பணியில் இருந்த திருக்கனுார் போலீசார் மாட்டு வண்டிகளை பின் தொடர்ந்து சென்று, தமிழக பகுதிகளில் நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அவர்கள், தங்கள் வந்துள்ள இடம் தமிழக பகுதியாகும்.
இங்கு புதுச்சேரி போலீசார் எதற்காக வந்து விசாரணை நடத்துகிறீர்கள், மாமுல் கேட்டு இங்கு வந்தீர்களா என புதுச்சேரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழக மாநில போலீசார் உண்மை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.