/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொங்கல் தொகுப்பை வீதியில் கொட்டிய வாலிபர் வைரலாகும் வீடியோ
/
பொங்கல் தொகுப்பை வீதியில் கொட்டிய வாலிபர் வைரலாகும் வீடியோ
பொங்கல் தொகுப்பை வீதியில் கொட்டிய வாலிபர் வைரலாகும் வீடியோ
பொங்கல் தொகுப்பை வீதியில் கொட்டிய வாலிபர் வைரலாகும் வீடியோ
ADDED : ஜன 16, 2025 03:48 AM

கடலுார், : கடலுார் அருகே பொங்கல் பரிசு தொகுப்பை வீதியில் கொட்டும் வாலிபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய தொகுப்பை ரேஷன்கடைகள் மூலம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. தொகுப்புடன் ரொக்கம் எதுவும் வழங்காததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
கடலுார் அடுத்த பெரியகங்கணாங்குப்பத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பான அரிசி, சர்க்கரையை வீதியில் கொட்டியதுடன், கரும்பையும் உடைத்து வீதியில் போட்டார். பணம் கொடுத்திருந்தாலாவது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கியிருக்கலாம் என புலம்பியபடியே அவர் பொருட்களை வீதியில் கொட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.