/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விஜய்க்கு கொள்கை கிடையாது: பா.ஜ., ராமலிங்கம்
/
விஜய்க்கு கொள்கை கிடையாது: பா.ஜ., ராமலிங்கம்
ADDED : ஆக 24, 2025 06:52 AM
புதுச்சேரி : தமிழக முதல்வரை 'அங்கிள்' எனக் கூறியதை தி.மு.க.,வினர் எப்படி பொறுத்துக் கொண்டுள்ளனர் என, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
காரைக்காலில் நடந்த பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற மாநில தலைவர் ராமலிங்கம், நிருபர்களிடம் கூறியதாவது;
விஜய்யால் புதுச்சேரிக்கு எந்த ஒரு மாற்றமும் வராது. அவர் நடத்தியது அரசியல் மாநாடு அல்ல. ரசிகர்களின் மாநாடு. எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் கொள்கைகளை பின்பற்ற அவர்களது கட்சிகள் இருக்கும் போது விஜய் ஏன், அவர்கள் கொள்கையை கூற வேண்டும்.?
விஜய்க்கு என எந்த ஒரு கொள்கையும் இருப்பதாக தெரியவில்லை. சினிமாவில் பணம் சேர்த்து விட்டோம்.
இனி அரசியலுக்கு வருவோம் என, அவர் வந்துள்ளார். பா.ஜ.,வை எதிரி என சொல்வதற்கு அவருக்கு அருகதையே இல்லை.
அந்த அளவிற்கு அவருக்கு கொள்கை அறிவு இல்லை.
கோமாளித்தனமான அறிக்கையை விஜய் கொடுத்துள்ளார். சினிமா 'டயலாக்' போல, தமிழக முதல்வரை 'அங்கிள்' என கூறியுள்ளார். இதை எப்படி தி.மு.க.,வினர் பொறுத்துக் கொண்டுள்ளனர்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புத்திசாலி. விஜயுடன் பேசுவதால் மட்டும் அவர், அரசியல் கூட்டணி வைத்துக் கொள்வார் என்று கூற முடியாது.
விஜயால் ஆட்சி அமைக்க முடியாது. அவருக்கு எத்தனை சதவீத ஓட்டுகள் என்பது வரும் தேர்தலில் தான் தெரியும். அவருடன் நட்பு ரீதியாக பேசுவாரே தவிர தேசிய ஜனநாயக கூட்டணியை தான் ரங்கசாமி மீண்டும் கொண்டு வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.