/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'விஜய் ஹசாரே' கிரிக்கெட் : புதுச்சேரி அணி வெற்றி
/
'விஜய் ஹசாரே' கிரிக்கெட் : புதுச்சேரி அணி வெற்றி
'விஜய் ஹசாரே' கிரிக்கெட் : புதுச்சேரி அணி வெற்றி
'விஜய் ஹசாரே' கிரிக்கெட் : புதுச்சேரி அணி வெற்றி
ADDED : ஜன 08, 2026 05:15 AM

வில்லியனுார்: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் 'விஜய் ஹசாரே' கோப்பைக்கான ஆடவர் ஒரு நாள் போட்டியில் புதுச்சேரி அணி வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 'விஜய் ஹசாரே' கோப்பைக்கான ஆடவர் ஒரு நாள் போட்டி அகமதாபாத் நகரில் நடந்து வருகிறது. இதில் புதுச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் (சீஏபி)சார்பில், பங்கேற்ற புதுச்சேரிஅணியும் மத்திய பிரதேசம் அணியும் மோதின.
முதலில் ஆடிய மத்திய பிரதேசம் அணி 49.5 ஓவர்களில் 228 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. புதுச்சேரி அணியின் அமன் கான் 3 விக்கெட்கள்,பரத் வாகிநீ மற்றும் சாகர் உதேசி தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய புதுச்சேரி அணி 43 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 229 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புதுச்சேரி அணியின் பரமேஸ்வரன் 60 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்தார். அமன் கான் 3 விக்கெட் எடுத்ததுடன், 55 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

