/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விஜய் ரசிகர்களை தாக்கிய பொதுமக்களால் பரபரப்பு
/
விஜய் ரசிகர்களை தாக்கிய பொதுமக்களால் பரபரப்பு
ADDED : அக் 28, 2024 05:48 AM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு வந்த விஜய் ரசிகர்களை பொதுமக்கள் தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரத்தில் நடந்த விஜய் மாநாட்டிற்கு வந்த சென்னையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் 5 க்கும் மேற்பட்டோர் மாநாட்டிற்கு வந்து, மாநாடு முடிந்து நேற்று இரவு காரில் புதுச்சேரிக்கு வந்தனர்.
அவர்கள் பாண்டி மெரினாவில் மது அருந்தி விட்டு சாப்பாடு வாங்குவதற்காக வம்பாகீரப்பாளையம் வழியாக காரில் வந்தனர்.
அப்போது எதிரே வந்த வம்பாகீரப்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் 50, வடிவேல் 35, இருவரும் பைக்கில் வந்தனர்.
பைக்கை சக்திவேல் ஓட்டி வந்தார். அப்போது எதிர் வந்த விஜய் ரசிகர்கள் கார், சக்திவேல் பைக்கை உரசுவது போல் சென்றது. இதையடுத்து சக்திவேல் விஜய் ரசிகர்களை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சக்திவேலை தாக்கினர்.
இதனை தடுக்க வந்த வடிவேலுவையும் தாக்கினர். தகவலறிந்த அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விஜய் ரசிகர்களை தாக்கினர்.
தகவலறிந்த ஒதியன்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பையும் சமாதனம் செய்து அனுப்பி வைத்தனர்.
பலத்தகாயமடைந்த விஜய் ரசிகர்கள் மற்றும் சக்திவேல், வடிவேல் ஆகியோர் அரசு பொது மருத்துவமைனயில் சிகிச்சை பெற்று வகின்றனர்.

