/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவேகானந்தா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
விவேகானந்தா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 18, 2025 02:36 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் உள்ள செல்லபெருமாள்பேட்டை, விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ., ௧௦ம் வகுப்பு பொதுத் தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளி மாணவி ஹரிதா 500க்கு 465 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். மாணவி பிரியதர்சிகா 464 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம், மாணவி யுவபிரியா 455 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர்.
மேலும், 6 மாணவர்கள் 450க்கும் மேலும், 14 மாணவர்கள் 350க்கும் மேலும் மதிப்பெண் பெற்றுள்ளனர். பள்ளியில் தேர்வு எழுதிய அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவ, மாணவிகளை விவேகானந்தா கல்வி குழுமத்தின் தாளாளர், செல்வகணபதி எம்.பி., பாராட்டினார். பள்ளி முதன்மை முதல்வர் பத்மா, துணை முதல்வர் மீனாட்சி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.