/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிளஸ் 1 அரசு பொது தேர்வில் விவேகானந்தா பள்ளி 'சென்டம்'
/
பிளஸ் 1 அரசு பொது தேர்வில் விவேகானந்தா பள்ளி 'சென்டம்'
பிளஸ் 1 அரசு பொது தேர்வில் விவேகானந்தா பள்ளி 'சென்டம்'
பிளஸ் 1 அரசு பொது தேர்வில் விவேகானந்தா பள்ளி 'சென்டம்'
ADDED : மே 17, 2025 12:21 AM

புதுச்சேரி: பிளஸ் 1 அரசு பொதுத் தேர்வில் செல்லப்பெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பள்ளியில் பிளஸ் 1 தேர்வு எழுதிய 208 மாணவிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி தர்ஷினிபிரியா 600க்கு 588 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் முதல் இடம் பிடித்தார். வர்ஷினி 586 மதிப்பெண்களுடன் 2ம் இடம் பிடித்தார். மாணவிகள் கமலிகா, சந்தியா ஆகியோர் 582 மதிப்பெண்கள் பெற்று 3வது இடம் பிடித்தனர்.
500 மதிப்பெண்களுக்கு மேல் 34 பேரும், 450க்கு மேல் 50 பேரும், 400க்கு மேல் 61 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தாவரவியல் பாடத்தில் ஒருவரும், பிரெஞ்சு பாடத்தில் ஒருவரும், கணினி அறிவியலில் 2 பேரும், கணிதத்தில் ஒருவரும், வணிகவியலில் ஒருவரும், கணினி பயன்பாட்டியல் பாடத்தில் 2 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவிகளை விவேகானந்தா கல்வி குழுமத்தின் தாளார் செல்வகணபதி எம்.பி., முதன்மை முதல்வர் பத்மா, விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி முதல்வர் கீதா ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.