/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவேகானந்தரின் 163வது பிறந்த நாள் விழா
/
விவேகானந்தரின் 163வது பிறந்த நாள் விழா
ADDED : ஜன 13, 2026 06:48 AM

புதுச்சேரி: புதுச்சேரி ராமகிருஷ்ணா மடம் மற்றும் ராமகிருஷ்ணா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி சார்பில் விவேகானந்தரின் 163 வது பிறந்த நாள் தேசிய இளைஞர் தினமாக பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு ராமகிருஷ்ணா மடத்தின் பொறுப்பாளர் சுவாமி நித்யேஷ் நந்தா மகராஜ் தலைமை தாங்கி, பேசினார். தொடர்ந்து பூஜை மற்றும் ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.
பின், சுவாமி விவேகானந்தரின் அலங்கரிக்கப்பட்ட உருவப்படம் கருவடிக்குப்பம், இ.சி.ஆர்., கிருஷ்ணா நகர் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தை சுவாமி நித்யேஷ் நந்தா மகராஜ், பள்ளியின் தாளாளர் கணேசன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
அனைத்து சேவா சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை இயக்குநர் கிருஷ்ணராஜூ, பள்ளியின் துணை முதல்வர் சுந்தரமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

