/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி
/
இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி
இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி
இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி
ADDED : டிச 27, 2025 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடக்கிறது.
புதுச்சேரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்த பணி நடைபெற்று வருகிறது.
இதற்கான சிறப்பு முகாம் இன்று 27 ம் தேதியும், நாளை 28 ம் தேதியும், வரும் 3 மற்றும் 4ம் தேதிகளிலும் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நடக்கிறது. பெயர் சேர்க்க, திருத்தம் செய்வோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.