/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டம் துவக்கம்
/
பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டம் துவக்கம்
பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டம் துவக்கம்
பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டம் துவக்கம்
ADDED : அக் 23, 2024 04:23 AM

புதுச்சேரி : புதுச்சேரி பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் இன்று (23ம் தேதி) முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து உள்ளனர்.
புதுச்சேரி அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வவுச்சர் ஊழியர்களுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமையில் புதுச்சேரி வவுச்சர் ஊழியர்கள், பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை நேற்று மாலை 6:00 மணி அளவில் முற்றுகையிட்டு, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் முதல்வர் அறிவித்தபடி ரூ. 18 ஆயிரம் ஊதியம் வழங்குவதற்கான அரசாணை வெளியிட வேண்டுமென வலியுறுத்தினர்.
இதையடுத்து, இரவு 9:00 மணி அளவில் தலைமை பொறியாளர் தீனதயாளன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இன்று (23ம் தேதி) மாலை உயர்த்தப்பட்ட சம்பளம் தொடர்பான அரசாணை வெளியிட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதைதொடர்ந்து, தலைமை பொறியாளர் அலுவலகத்தில் இருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து கூட்டமைப்பு தலைவர் சரவணன் கூறுகையில்,
தலைமை பொறியாளர் இன்று (23ம் தேதி) மாலை அரசாணை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அரசாணை வெளியிடப்படும் வரை அறிவித்தப்படி இன்று (23ம் தேதி) முதல் பொதுப்பணித் துறை வவுச்சர் ஊழியர்கள் அனைவரும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவர்.
இதனால், புதுச்சேரி மாநில முழுதும், குடிநீர் விநியோகம், சாலை சீரமைப்பு, வாய்க்கால்கள் துார்வாரும் பணி உள்ளிட்டவை பாதிக்கப்படும் என்றார்.