/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தென்பெண்ணை கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
/
தென்பெண்ணை கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
ADDED : டிச 12, 2024 06:13 AM
பாகூர்: பாகூர் பகுதியில் பெய்து வரும் கனமழை மற்றும் சாத்தனுார் அணை திறப்பு காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றின் கரை உடைந்ததால், பாகூர் பகுதி கிராமப்புறங்களில் தண்ணீர் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது. ஏரி, குளம், குட்டை என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பின.
இந்நிலையில், மீண்டும் வரும் 16ம் தேதி வரை புதுச்சேரியில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது.
மீண்டும் மழை பெய்ய துவங்கியதால் பாகூர் பொதுப்பணித்துறை நீர் பாசன கோட்ட பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மழையால் தற்போது சாத்தனுார் அணை திறக்கப்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆற்றில் மீண்டும் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

