தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இடதுசாரி கட்சிகள் இணைந்து தமிழகத்தில் மாற்றுப்பதையில் பயணிக்க திட்டமிட்டுள்ளோம்: மா.கம்யூ., பாலகிருஷ்ணன் பேட்டி

இடதுசாரி கட்சிகள் இணைந்து தமிழகத்தில் மாற்றுப்பதையில் பயணிக்க திட்டமிட்டுள்ளோம்: மா.கம்யூ., பாலகிருஷ்ணன் பேட்டி

இடதுசாரி கட்சிகள் இணைந்து தமிழகத்தில் மாற்றுப்பதையில் பயணிக்க திட்டமிட்டுள்ளோம்: மா.கம்யூ., பாலகிருஷ்ணன் பேட்டி


UPDATED : செப் 08, 2026 11:08 PM

ADDED : செப் 08, 2026 10:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2026 11:08 PM ADDED : செப் 08, 2026 10:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளும் அரசுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும் என, மா.கம்யூ., அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

புதுச்சேரியில், மா.கம்யூ., சார்பில் நடந்த சிறப்பு கருத்தரங்கில் பங்கேற்ற பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி, தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்., காங்., -பா.ஜ., கூட்டணியை, அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து முறியடிக்க வேண்டும்.

புதுச்சேரியில் கடந்த சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணியில் இருந்த காங்., -தி.மு.க., போன்ற கட்சிகள் சரியான அனுகுமுறையை கடைபிடிக்காமல் அவரவர் சுயநலத்துக்காக போட்டி போட்டுக்கொண்டு அந்த கூட்டணியே இல்லாமல் ஆக்கிவிட்டனர். அதன் விளைவுதான் என். ஆர். காங்., -பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது.

வரும் இடைத்தேர்தலிலாவது அந்த தவறை சரி செய்ய பா.ஜ., -என்.ஆர்.காங்., கூட்டணியை முறியடிக்க எல்லோரும் ஓரணியில் திரள வேண்டும். பிரதமர் மோடி அரசு ராணுவ தளவாடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு விற்று வருகின்றது. இப்போது இந்திய வானவியல் ஆராய்ச்சி உட்பட பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பயன்படும் இஸ்ரோ அமைப்பை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடி அரசின் செயல்பாடு காரணமாக இன்று விலைவாசி உயர்ந்துள்ளது. அதனை கட்டுப்படுத்த மோடி அரசும், தமிழக அரசும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

சட்டசபையில் சட்டத்தை இயற்றுவது, மக்களின் வாழ்வாதாரத்தை விவாதிப்பதற்கு பதிலாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்வது, விமர்சிப்பது என்ற போக்கில் செல்வது நல்லதல்ல.

த.வெ.க., வுக்கு மக்கள் நல்ல வாய்ப்பை கொடுத்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு முதல்வர் நிதானமாக பதில் சொல்ல வேண்டும். மக்களுக்கு பயன்படும் வகையில் தங்களின் கருத்துக்களை முன்வைக்க வேண்டும். நாங்கள் தி.மு.க., த.வெ.க., கூட்டணியில் இல்லை. இடதுசாரி கட்சிகள் இணைந்து தமிழகத்தில் மாற்றுப்பதையில் பயணிக்க திட்டமிட்டுள்ளோம். த.வெ.க., கூட்டணி கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ளபோவதில்லை. ஆனாலும் அரசுக்கு எங்களின் ஆதரவு தொடரும் என்றார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us