ADDED : பிப் 02, 2025 04:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
வில்லியனுாரில் உள்ள பிரசித்திபெற்ற தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில், தை மாத மூன்றாவது வெள்ளிக்கிழமை காலை 10:00 மணியளவில் சிறப்பு திருமஞ்சனம், இரவு 7:00 மணியளவில் பெருமாள் தாயார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
விழாவில் வில்லியனுார் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சந்தானராமன் மற்றும் உற்சவதாரர்கள் செய்தனர்.