/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூடுதல் விலைக்கு விற்றால் அபராதம் எடையளவு அதிகாரி எச்சரிக்கை
/
கூடுதல் விலைக்கு விற்றால் அபராதம் எடையளவு அதிகாரி எச்சரிக்கை
கூடுதல் விலைக்கு விற்றால் அபராதம் எடையளவு அதிகாரி எச்சரிக்கை
கூடுதல் விலைக்கு விற்றால் அபராதம் எடையளவு அதிகாரி எச்சரிக்கை
ADDED : ஏப் 10, 2025 04:25 AM
புதுச்சேரி: வியாபாரிகள், 'பிரி பேக்கிங்' பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் அபராதம் விதிக்கப்படும் என எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி மேத்யூ பிரான்சிஸ் எச்சரித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மாநிலத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், பேக்கரி, மளிகை மற்றும் காய்கறி கடைகளின் உரிமையாளர்கள், முன்னரே பேக் செய்து (பிரி பேக்கிங்) பொருட்களை, சட்டமுறை எடையளவை விதி 2011ன் படி விற்பனை செய்ய வேண்டும்.
மேற்கண்ட நிறுவனங்கள் தங்கள் சொந்த தயாரிப்புகளை 'பேக்கிங்' செய்து விற்பனை செய்யும் போது அதில், முகவரி, பேக்கிங் தேதி, காலாவதி தேதி, எடை அளவு மற்றும் விலை விபரம் அச்சிட வேண்டும். மேலும், தட்டாஞ்சாவடியில் உள்ள சட்டமுறை எடையளவு அலுவலகத்தில் ரூ.500 செலுத்தி பதிவுச் சான்று பெற்றுக் கொள்ள வேண்டும்.
பதிவு சான்று பெறாத நிறுவனங்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், பேக்கிங் பொருட்களில் குறிப்பிட்டுள்ள அதிகப்பட்ச விலைக்கு மேல் விற்றாலோ அல்லது எடை குறைவு இருந்தாலோ அபராதம் விதிக்கப்படும்.
இதுதொடர்பாக சட்டமுறை எடையளவு அதிகாரிகள் கடைகளில் விற்கப்படும் 'பேக்கிங்' பொருட்களை திடீர் ஆய்வு செய்து, குறைபாடு இருப்பின் அபராதம் விதிப்பார்கள்.
இதுதொடர்பாக சந்தேகம் இருப்பின், புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0413 2253462, 2252493 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

