/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முத்திரை இல்லாத தராசுகள் பறிமுதல் எடையளவு அதிகாரி எச்சரிக்கை

 முத்திரை இல்லாத தராசுகள் பறிமுதல் எடையளவு அதிகாரி எச்சரிக்கை

 முத்திரை இல்லாத தராசுகள் பறிமுதல் எடையளவு அதிகாரி எச்சரிக்கை

 முத்திரை இல்லாத தராசுகள் பறிமுதல் எடையளவு அதிகாரி எச்சரிக்கை

 முத்திரை இல்லாத தராசுகள் பறிமுதல் எடையளவு அதிகாரி எச்சரிக்கை

ADDED : பிப் 20, 2026 05:25 AM


Google News
புதுச்சேரி: அரசாங்க முத்திரை இல்லாத எடை அளவைகள், எடை இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்படும் என சட்ட முறை எடையளவை கட்டுப்பாட்டு அதிகாரி மேத்யூ பிரான்சிஸ் எச்சரித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் பல பகுதிகளில் உள்ள கடைகளில் பயன்படுத்தப்படும் எடைகள், அளவைகள் மற்றும் எடையளவு இயந்திரங்கள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வணிகர்கள், தங்களுடைய பயன்பாட்டில் உள்ள எடை கருவிகள் மற்றும் அளவைகளை உரிய தொகை செலுத்தி, அரசு முத்திரை பதித்து உரிய சான்றிதழ் பெற்று கடைகளில் பார்வையான இடத்தில் வைக்க வேண்டும்.

புதிதாக, எடை அளவை மற்றும் எடையளவு இயந்திரத்தை வாங்கும் பொழுது, அதில் அரசு முத்திரை உள்ளதா என்பதை கவனித்திட வேண்டும். மின்னணு தராசு வாங்கும் பொழுதும் அந்த இயந்திரத்தின் தன்மைகளைக் குறிப்பிடும் அடையாளத் தகடு மற்றும் அரசு முத்திரை பதித்ததற்கான சான்றிதழை அவசியம் வணிகர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். முத்திரை இல்லாத தராசுகள், எடையளவைத் துறை ஆய்வாளர்களால் பறிமுதல் செய்யப்படும்.

வணிகர்களின் நலன் கருதி, பகுதி வாரியாக மார்க்கெட் பகுதிகளில் சட்டமுறை எடை அளவைத்துறை ஆய்வாளர்கள், எடைகள் அளவைகள் மற்றும் எடையளவு இயந்திரங்களின் மீது முத்திரையிட உள்ளனர்.

அதன்படி, முத்தியால்பேட்டை மார்க்கெட்டில் இன்று (20ம் தேதி), 23ம் தேதி குபேர் பெரிய மார்கெட, 24ம் தேதி காலை மதகடிப்பட்டு, 24ம் தேதி மதியம் மடுகரை, 25ம் தேதி திருக்கனுார், 26ம் தேதி வில்லியனுார், 27 ம் தேதி பாகூர், மார்ச் 23ம் தேதி நெல்லித்தோப்பு, 3ம் தேதி முதலியார்பேட்டை, 4ம் தேதி லாஸ்பேட்டை உழவர் சந்தை, 5ம் தேதி சின்னக்கடை சந்தை மற்றும் உழவர்சந்தை, 6ம் தேதி அரியாங்குப்பம் சந்தையில் சிறப்பு முகாம் நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.