/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி., விலை விவரங்களை குறிப்பிடாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம் எடையளவை கட்டுப்பாட்டு அதிகாரி எச்சரிக்கை

ADDED : அக் 07, 2025 01:20 AM
புதுச்சேரி,; பொருட்களில் ஜி.எஸ்.டி., யில் திருத்தப்பட்ட விலை விவரங்கள் ஒட்டப்படாமல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி அரசு சட்டமுறை எடையளவை கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
இந்திய அரசாங்கத்தால் விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி), கீழ் கூறப்பட்டுள்ள பொருட்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைக்கப்பட்ட வரி அடுக்குகள் கடந்த மாதம் 22ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய ஜி.எஸ்.டி., 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் ஆகிய இரண்டு அடுக்கு கட்டமைப்பிற்கு எளிமைப் படுத்தப்பட்டுள்ளது.
இதில், அத்தியாவசிய வீட்டுப்பொருட்கள் மீதான வரிகளை 5 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், உயிர் காக்கும் மருந்துகள் 12 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக அல்லது 5 சதவீதமாகவும், இரு சக்கர வாகனங்கள், சிறிய கார்கள், டி.வி., ஏ.சி., சிமென்ட் ஆகியவற்றை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், பண்ணை இயந்திரங்கள், நீர்ப்பாசன உபகரணங்கள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன.
இது போன்று திருத்தப்பட்ட விலை விவரங்களை முத்திரையிட்டு அல்லது ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. பொருட்களை பழைய ஜி.எஸ்.டி., விலைக்கு அல்லது திருத்தப்பட்ட விலை விவரங்கள் ஒட்டப்படாமல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், விதி மீறும் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு சட்டமுறை எடையளவை சட்டம், 2009ன் பிரிவு 36 (2) கீழ் அதிகபட்ச தண்டனையான ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பது தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.