ADDED : மே 27, 2025 07:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : மணவெளி தொகுதியில், முதியோர் உதவித் தொகை வாங்கும், முதியவர்களுக்கு இலவச போர்வை மற்றும் காலணி களை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.
புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் மாதாந்திர முதியோர் உதவித் தொகை பெறும், முதியவர்களுக்கு இலவச போர்வை மற்றும் காலணி வழங்கப்பட்டது.
மணவெளி தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களில், மொத்தம் 4 ஆயிரத்து 260 நபர்களுக்கு போர்வை, காலணியை சபாநாயகர் செல்வம் பயனாளிகளுக்கு நேற்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி செல்வகுமார், பா.ஜ., பிரமுகர் ஞானசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.