/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நலத்திட்ட உதவிகளை அரசு துறைகளின் மூலமே வழங்கவேண்டும்: அ.தி.மு.க.,அன்பழகன் கருத்து

ADDED : ஏப் 18, 2025 04:11 AM
புதுச்சேரி: அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு துறைகளின் மூலமே வழங்க வேண்டுமென அ.தி.மு.க., வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநில செயலாளர் அன்பழகன் பேட்டி:
தமிழக அமைச்சர் பொன்முடி கடந்த சில தினங்களுக்கு முன் பேசியது ஆணவத்தின் உச்சமாகும்.
அட்டவணை இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்குவதுபோல், முழு கல்வி உதவித்தொகை மீனவ சமுதாய மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு அ.தி.மு.க., சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. புதுச்சேரியில் நலத்திட்ட உதவிகளை பெற தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும் போது, துறையின் அதிகாரிகள் அதற்கான ஆணை கடிதத்தை மொத்தமாக சில எம்.எல்.ஏ.,களிடம் கொடுத்து விடுகின்றனர். அவர்கள் இதற்கான ஆணை கடிதத்தை தங்களது கட்சி அலுவலகத்திற்கு பயனாளிகளை வரவழைத்து வழங்குகின்றனர். இதனால், மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் கடிதத்தை பெறமுடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை அரசு துறைகளின் மூலமே வழங்குவதற்கு தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.