/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மேகதாது அணை கட்டுவதை தடுக்க ஸ்டாலின் டில்லி செல்லாதது ஏன்?
/
மேகதாது அணை கட்டுவதை தடுக்க ஸ்டாலின் டில்லி செல்லாதது ஏன்?
மேகதாது அணை கட்டுவதை தடுக்க ஸ்டாலின் டில்லி செல்லாதது ஏன்?
மேகதாது அணை கட்டுவதை தடுக்க ஸ்டாலின் டில்லி செல்லாதது ஏன்?
ADDED : ஜூலை 12, 2025 03:17 AM
புதுச்சேரி: தேர்தலில் நிற்காமல் முதல்வராக நாராயணசாமி நியமிக்கப்பட்டது எப்படி என்பதை வைத்திலிங்கம் தெரிவிக்க வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர், கூறியதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியை பாலைவனமாக்கும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக காங்., அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக, முதல்வர், துணை முதல்வர் டில்லிக்கு சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து மேகதாது அணை கட்டுவது சம்பந்தமான விரிவான திட்ட அறிக்கையை வழங்கியுள்ளனர்.
ஆனால், கர்நாடக அரசின் எந்த செயலையும் எதிர்க்க துணிவில்லாத பலகீனமான முதல்வராக ஸ்டாலின் உள்ளார். டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டில் உதயநிதியை காப்பாற்ற டில்லி சென்று பிரதமரை சந்தித்த முதல்வர், மேகதாது அணை கட்டும் கர்நாடக முயற்சியை தடுக்க ஏன் மத்திய நீர்வளத்துறை அமைச்சரையும், பிரதமரையும் சந்திக்க டில்லி செல்லவில்லை.
தேர்தலில் போட்டியிடாத ராமலிங்கம், பா.ஜ., மாநில தலைவராக எப்படி நியமிக்கலாம் என காங்., தலைவர் வைத்திலிங்கம் கேள்வி கேட்கிறார். தேர்தலில் நிற்காமல் முதல்வராக நாராயணசாமியும், பிரதமராக மன்மோகன்சிங்கும் நியமிக்கப்பட்டது எப்படி என்பதை வைத்திலிங்கம் தெரிவிக்க வேண்டும்' என்றார்.
மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில இணைச் செயலாளர்கள் கணேசன், திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், முன்னாள் மாநில ஜெ., பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் உடனிருந்தனர்.