sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தொழிற்சாலைகள் மூடப்பட்டது ஏன்? முதல்வர் ரங்கசாமி விளக்கம்

/

 தொழிற்சாலைகள் மூடப்பட்டது ஏன்? முதல்வர் ரங்கசாமி விளக்கம்

 தொழிற்சாலைகள் மூடப்பட்டது ஏன்? முதல்வர் ரங்கசாமி விளக்கம்

 தொழிற்சாலைகள் மூடப்பட்டது ஏன்? முதல்வர் ரங்கசாமி விளக்கம்


ADDED : பிப் 13, 2026 05:54 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில், தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு வேலை செய்யும் எண்ணம் இல்லாதாலே , தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக முதல்வர் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி சட்டசபை கூடியதும் பேசிய எதிரக்கட்சி தலைவர் சிவா, புதுச்சேரியில் 19 தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அதனை திறக்க மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை.

பொதுப்பணித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணி நிரந்தரம் கேட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் தினமும் போராட்டம் நடத்துகின்றனர். ஆட்சி முடிவதற்குள் அவர்களை பணி நிரந்தரம் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க' வேண்டும்

இதற்கு முதல்வர் ரங்கசாமி பதலளித்து பேசுகையில், புதுச்சேரியில் இயங்கி வந்த சுதேசி, பாரதி, ஏ.எப்.டி., கூட்டுறவு நுாற்பாலைகள் எதனால் மூடப்பட்டது என அனைவருக்கும் தெரியும்.

இருப்பினும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கி வருகிறோம். அவர்களுக்கு பணிக்கொடையும் வழங்கப்படுகிறது.

பாசிக், பாப்ஸ்கோ உட்பட அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கியுள்ளோம். இந்த நிறுவனங்களை தொடர்ந்து நடத்த பல்வேறு முயற்சிகள் எடுத்தோம்.

ஆனால் அங்குள்ள தொழிலாளர்களுக்கு பணி செய்யும் எண்ணம் இல்லை. இருப்பினும் அங்கு வேறு வகையிலான ஐ.டி., உள்ளிட்ட தொழிற்சாலைகளை கொண்டுவர முடியுமா என ஆலோசித்து வருகிறோம்.

படித்த இளைஞர்கள் 5 ஆயிரம் பேருக்கு அரசு பணி வழங்கியுள்ளோம். இந்த பணியிடங்கள் பல ஆண்டாக நிரப்பப்படாமல் இருந்தது.

உள்கட்டமைப்பு பணிகளை ரூ.3,000 கோடியில் செய்துள்ளோம். மேலும், பல பணிகளுக்கு பூஜை போடப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி, ஆளும் கட்சி தொகுதி என எதிலும் பாரபட்சம் காட்டவில்லை. ஒட்டுமொத்த மாநில வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு செயல்பட்டுள்ளோம்.

தொழிலதிபர்கள் தங்கள் தொழிலுக்காக சிலவற்றை கூறுவார்கள். அதற்காக மதுபான கடைகளை மூட வேண்டும் என பேச முடியாது.

எதுவாக இருந்தாலும், சட்டசபையில் விவாதம் நடத்திதான் முடிவெடுக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகள் தொழிற்சாலை வரவில்லை என்கின்றனர். சேதராப்பட்டில் 750 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைய உள்ளது.

இதற்காக விரைவில் அடிக்கல் நாட்டப்படும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.






      Dinamalar
      Follow us