UPDATED : ஆக 23, 2026 06:56 PM
ADDED : ஆக 23, 2026 06:50 PM
காரைக்கால்: காரைக்காலில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காரைக்கால் சின்ன கோவில்பத்துபேட்டைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மகன் சுரேந்திரன்,34; கோட்டுச்சேரி தனியார் மருத்துவமனையில் அட்டெண்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு ராகில்லா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக இருவரும் பிரிந்து தனியாக வசித்து வருகின்றனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேந்திரன் அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில் தனியார் மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மனமுடைந்த சுரேந்திரன் வீட்டில் துாக்கிட்டு கொண்டார்.
உடன் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருந்துமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
புகாரின் பேரில் நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
