ADDED : ஏப் 23, 2026 07:00 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: வீட்டில் இருந்த மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்தார்.
முத்திரையர்பாளையம் மேட்டுத்தெரு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், 32, இவரது மனைவி சங்கீதா, 25; வீட்டில் இருந்த இவர் கடந்த 16ம் தேதி, காணாமல் போனார். இவரது கணவர் உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
