/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கேமரா மூலம் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பா?: போலீஸ் விளக்கம்
/
கேமரா மூலம் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பா?: போலீஸ் விளக்கம்
கேமரா மூலம் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பா?: போலீஸ் விளக்கம்
கேமரா மூலம் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பா?: போலீஸ் விளக்கம்
ADDED : மார் 17, 2025 02:42 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து விதிமீறல்கள், விபத்துகளும் அதிகரித்துள்ளது. இதனால் ரூ.4 கோடியில் நவீன போக்குவரத்து சிக்னல்களை அரசு அமைத்துள்ளது.
இ.சி.ஆரில் ரூ.99 கோடியில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு மையம் மூலம் இணைக்கப்பட்டு, விதிமீறல்கள் கண்டறியப்படும்.
கடந்த 14ம் தேதி முருங்கப்பாக்கம் சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவருக்கு போக்குவரத்து விதி மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டு, ஆன்லைனில் வாகனத்தின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இது புதுச்சேரியில் நவீன கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது என்ற செய்தி சமூகவலைதளங்களில் வைரலானது.
இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது, புதுச்சேரி முழுதும் நவீன கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. பணிகள் தொடர்ந்து நடக்கிறது.
நவீன கேமரா மூலம் கண்காணிப்பு பணி தொடங்கும். போது மக்களுக்கு முறையாக அறிவிக்கப்படும்.