/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாகூர் கல்லுாரி மைதானத்தில் குப்பைகள் அகற்றப்படுமா?
/
தாகூர் கல்லுாரி மைதானத்தில் குப்பைகள் அகற்றப்படுமா?
தாகூர் கல்லுாரி மைதானத்தில் குப்பைகள் அகற்றப்படுமா?
தாகூர் கல்லுாரி மைதானத்தில் குப்பைகள் அகற்றப்படுமா?
ADDED : ஜன 16, 2025 05:56 AM
புதுச்சேரி: லாஸ்பேட்டை தாகூர் கல்லுாரி மைதானத்தில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லாஸ்பேட்டை, ஏர்போர்ட் சாலையில் தாகூர் கலை கல்லுாரி மைதானம் உள்ளது. இங்கு, தனியார் நிறுவனங்களில் நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. அவ்வாறு நிகழ்ச்சி நடத்தும் நிறுவனங்கள், விளையாட்டு சங்கங்கள் நிகழ்ச்சியின்போது வீசப்படும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து மைதானத்தை ஒப்படைக்க வேண்டும்.
ஆனால், நிகழ்ச்சிகள் முடிந்ததும் ஏற்பாட்டார்கள் அங்கிருந்து கிளம்பி விடுகின்றனர்.
மைதானத்தை சுற்றிலும் வீசப்படும் குப்பைகள் அகற்றுவது இல்லை. இதனால் மைதானம் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், குப்பையில் கிடக்கும் உணவுகளை சாப்பிட தெரு நாய்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
தாகூர் கல்லுாரி மைதானம் சுற்றிலும் குவிந்துள்ள குப்பைகளை உழவர்கரை நகராட்சி சுத்தம் செய்வதுடன், தேவையான குப்பை தொட்டிகளையும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

