/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா?
/
சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா?
ADDED : ஜூன் 12, 2025 12:22 AM

காரைக்கால் : காரைக்கால், திருவேட்டக்குடி சிறுவர் பூங்காவை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டத்தில், நகர் மற்றும் கிராமப்பகுதிகளில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், பல்வேறு இடங்களில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி தொகுதி, திருவேட்டக்குடி பகுதியில் சிவன் கோவில் அருகில் உள்ள குழந்தைகள் சிறுவர் பூங்கா பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் பூதர் மண்டியுள்ளது.
மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி, விஷ ஜந்துக்களின் நடமாட்டம் காணப்படுகிறது. பூங்காவில் உள்ள உஞ்சல், சறுக்கு மரம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. எனவே, சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.