ADDED : ஜூலை 01, 2026 04:14 AM

புதுச்சேரி: புதுச்சேரி இ.சி.ஆரில், கொக்குபார்க் முதல் சிவாஜி சிலை வரை சாலையோரம் ஜல்லிகள் பெயர்ந்துள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டும்.
புதுச்சேரி, இ.சி.ஆர்., எப்போதும், மிகவும் பிசியாக காணப்படும் சாலை ஆகும்.இச்சாலையில் பெட்ரோல் பங்க், வணிக நிறுவனங்கள், மதுபானக் கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன், கொக்குபார்க் சிக்னல் முதல் சிவாஜி சிலை வரை சாலையை அகலப்படுத்த சாலை ஓரங்களில் ஜல்லிகள் கொட்டப்பட்டு சமன் செய்யப்பட்டது.
ஆனால் அதன் மீது தார் ஊற்றி சாலையை முழுமையாக செப்பனிடப்படவில்லை.இச்சாலையில் இயங்கும் நிறுவனங்களுக்கு வரும் வாகனங்கள் இந்த மோசமான சாலையில்தான் பார்க்கிங் செய்கின்னறர்.
மேலும் இந்நிறுவனங்களுக்கு செல்லும்போது, ஜல்லிகளில் கால்இடறி கீழே விழுகின்றனர்.
இதனால் சில சமயங்களில் போக்குவரத்து பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இச்சாலையில் ஓரங்களில், சில இடங்களில் பள்ளமாக இருப்பதால், கனரக வாகனங்வாகளுக்கு வழிவிட ஓதுங்கும் போது, விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பலமாதங்களாக ஜல்லிகள் கொட்டியுள்ள பகுதிகளில், தார் ஊற்றி சீரமைக்க வேண்டும் என்பதே அச்சாலையில் பயன்படுத்துவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
