/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முடங்கி கிடக்கும் ஒழுங்கு முறை விற்பனை கூடம்; இந்திய உணவு கழகம் நேரடியாக களம் இறங்குமா?
/
முடங்கி கிடக்கும் ஒழுங்கு முறை விற்பனை கூடம்; இந்திய உணவு கழகம் நேரடியாக களம் இறங்குமா?
முடங்கி கிடக்கும் ஒழுங்கு முறை விற்பனை கூடம்; இந்திய உணவு கழகம் நேரடியாக களம் இறங்குமா?
முடங்கி கிடக்கும் ஒழுங்கு முறை விற்பனை கூடம்; இந்திய உணவு கழகம் நேரடியாக களம் இறங்குமா?
ADDED : ஜன 26, 2025 05:55 AM

கன்னியக்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் முடங்கி கிடக்கும் நிலையில், இந்திய உணவு கழகம் நேரடியாக நெல் கொள்முதல் செய்திட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரியின் நெற் களஞ்சியமான பாகூர் பகுதியில் 12,500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தின் மொத்த நெல் உற்பத்தியில் பாகூருக்கு முக்கிய பங்குண்டு. இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி, புதுச்சேரி - கடலுார் சாலை கன்னியக்கோவிலில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இங்கு, ஒரு கண்காணிப்பாளர் உள்ளிட்ட 7 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பாகூர், சேலியமேடு, கிருமாம்பாக்கம், குருவிநத்தம், சோரியாங்குப்பம், மற்றும் அதனையொட்டி உள்ள தமிழக பகுதி விவசாயிகள் நெல், மணிலா, காராமணி, உளுந்து உள்ளிட்ட தானியங்களை கொண்டு வந்து விற்றனர்.
இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தானியங்களை உலர்த்தும் களம், நவீன எடை மேடை, குடோன் வசதி, ஓய்வறை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், விற்பனை கூட வளாகத்தில் குடோன் கட்டப்பட்டு தனியார் வசம் குத்தகைக்கு விடப்பட்டது. விற்பனை கூட, அலுவலகம் இயங்கி வந்த கட்டடம் வேளாண் துறையின் உழவர் உதவியகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒழுங்கு முறை விற்பனை கூடம் மற்றும் இந்திய உணவு கழக ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்து செல்லும் நிலையில், கொள்முதல் செய்யும் பணி தடைப்பட்டு விற்பனை கூடம் செயல்பாடின்றி முடங்கி கிடக்கிறது.
இதனால், வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளின் நிலத்திற்கு சென்று நெல்லை கொள்முதல் செய்வதால், எடை அளவு மற்றும் விலையில் முறைகேடுகள் நடப்பதால், இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
இது குறித்து பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர் கூறுகையில்,
'கன்னியக்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நெல் கொள்முதல் செய்வது கிடையாது. வியாபாரிகள் நேரடியாக வயலில் கொள்முதல் செய்வதால், விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஆதார விலை கிடைப்பதில்லை. தமிழக பகுதியில் விவசாயிகளை தேடிச் சென்று, இந்திய உணவுக் கழகத்தின் மூலமாக நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஆனால், புதுச்சேரியில் இந்திய உணவு கழகம், விவசாயிகளை தேடி சென்று கொள்முதல் செய்வதில்லை.
இந்த விஷயத்தில், அரசியல் கட்சிகளை சார்ந்த தொழிற்சங்கங்களும் குரல் கொடுக்காமல் மவுனம் காப்பது வியாபாரிகளுக்கு ஆதரவான செயலாகவே பார்க்க வேண்டி உள்ளது' என்றார்.

