/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் மின்துறை தனியார் மயம்?
/
புதுச்சேரியில் மின்துறை தனியார் மயம்?
ADDED : ஆக 29, 2025 03:26 AM
புதுச்சேரி:மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகத்தை தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்தது.
புதுச்சேரியில் இதை அமல்படுத்த அப்போதைய முதல்வர் நாராயணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு மின்துறையை தனியார் மயமாக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. புதுச்சேரியை பொறுத்தவரை லாபத்தில் இயங்கி வரும் மின்துறையை தனியார் மயமாக்குவது ஏன், என ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் கேள்விகள் எழுப்பப்பட்டது.
மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கினர். முதல்வர் ரங்கசாமி, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்தநிலையில் தேசிய பங்கு சந்தையில் புதுச்சேரி மின்துறை பங்குகளை 'அதானி எனர்ஜி சோலியுசன்ஸ்' 100 சதவீதம் பங்குகளை வாங்கியதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி, வினியோகம், மாற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான உரிமங்களை வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி புதுச்சேரி மின்துறையானது, 'அதானி எலக்ட்ரி சிட்டி புதுச்சேரி லிமிடெட்' என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்றபோது முடியவில்லை.