ADDED : செப் 08, 2025 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வயிற்று போக்குக்கு சிகிச்சை எடுத்த பெண் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி கோவிந்தசாலை, நெல்லித்தோப்பு ஆகிய பகுதிகளில் 20க்கும் மேற்பட்டோர் வாந்தி பேதி காரணமாக கடந்த 2 நாட்களாக புதுச்சேரி அரசு மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவமனை, ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் உருளையான்பேட்டை கோவிந்தசாலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வயிற்று போக்கு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.