/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு
/
பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு
ADDED : ஏப் 02, 2025 03:57 AM
புதுச்சேரி : தனியார் பஸ்சில் பெண்ணிடம் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, நைனார்மண்டபத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி பத்மாவதி, 54. இவர் நேற்று முன்தினம் இரவு , கனகசெட்டிக்குளத்தில் வசிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக, தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கனகசெட்டிக்குளம் செல்லும் தனியார் பஸ்சில் சென்றுள்ளார்.
பஸ் அந்தோணியார் கோவில் அருகே சென்றபோது, டிக்கெட் எடுப்பதற்காக தான் கொண்டு வந்திருந்த கட்டப்பையில் இருந்த மணிபர்சை தேடியுள்ளார்.
அப்போது, கட்டப்பையின் கீழ் பகுதி பிளேடு மூலம் கிழிக்கப்பட்டு, அதில் இருந்த மணிபர்ஸ் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அந்த மணிபர்சில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான ஒன்றை சவரன் செயின், கமல் மற்றும் 8000 ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை இருந்தது.
பத்மாவதியின் புகாரின் பேரில், உருளையன்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

