UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 09:44 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டையை சேர்ந்தவர் 30 வயது பெண். இவரது கணவர் இறந்த நிலையில், குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சுந்தர் மெரான், பேஸ்ஸ் புக் மூலம் அறிமுகமாமி, அந்த பெண்ணிடம் நட்பாக பழகினார். பின்னர் அந்த பெண்ணும், அவரது குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், சுந்தர் மெரான் மது குடித்து விட்டு, அந்த பெண்ணை துன்புறுத்தி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டது.
தனியாக வசித்து வந்த அந்த பெண்ணின் தந்தையிடம் உன் மகள் வாழ வரவில்லை எனில், ஒன்றாக இருந்த போட்டோவை சமூக வலைதளங்களில் விடுதாக கூறினார். மேலும், அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து, அப்பெண் கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சுந்தர் மெரானை தேடி வருகின்றனர்.
