/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவமனையில் பணி புறக்கணிப்பு போராட்டம்
/
அரசு மருத்துவமனையில் பணி புறக்கணிப்பு போராட்டம்
ADDED : ஜன 08, 2026 05:22 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில சுகாதார ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனையில் காலை இரண்டு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டம் நேற்று நடந்தது.
அதன்படி காலை 8:00 முதல் 10:00 மணி வரை நடந்த போராட்டத்திற்கு தலைவர் ஹரிஹரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பிரபாத் கோரிக்கை வலியுறுத்தி நோக்க உரையாற்றினார். மத்திய கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் லட்சுமண சாமி கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
போராட்டத்தில் அரசு விதிகள் மற்றும் ஆணைகள் அடிப்படையில் நியமன விதிகள் திருத்தம் மற்றும் அரசு அறிவித்த சம்பள விகித மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வெங்கட்ராமன் நன்றி கூறினார்.

