/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அக்குபஞ்சர் வாக்கிங் டிராக் ரூ.3.75 கோடியில் பணிகள் 'விறுவிறு'
/
அக்குபஞ்சர் வாக்கிங் டிராக் ரூ.3.75 கோடியில் பணிகள் 'விறுவிறு'
அக்குபஞ்சர் வாக்கிங் டிராக் ரூ.3.75 கோடியில் பணிகள் 'விறுவிறு'
அக்குபஞ்சர் வாக்கிங் டிராக் ரூ.3.75 கோடியில் பணிகள் 'விறுவிறு'
ADDED : ஜன 14, 2025 06:23 AM

புதுச்சேரி: வனத்துறையொட்டியுள்ள சுதேசி மில் வனத்தில் இனி, இயற்கையோடு இணைந்த அக்குபஞ்சர் வாங்கிங் செல்ல, 3.75 கோடி ரூபாயில் டிராக் அமைக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி நகர பகுதியில் அடர்ந்த மரங்கள் வளர்ந்த காடாக, வனத்துறையொட்டியுள்ள சுதேசி மில் வனம் காடு உள்ளது. மரங்கள் அடர்ந்த இங்கு பறவைகள், பல்வேறு உயிரினங்கள் வசிக்கின்றன. சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த காட்டுக்குள் ஒரு நடைபயணம் மேற்கொள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 3.75 கோடி ரூபாய் செலவில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
அதுவும், அக்குபஞ்சர் ஸ்டைலில் நடைபாதையில் கூழாங்கற்கள், கருங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் இந்த வாக்கிங் ட்ராக் முழுவதுமாக பயன்பாட்டிற்கு ரெடியாகிவிடும்.
இதுகுறித்து ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் கூறும்போது, அக்குபஞ்சர் என்பது, உடலில் ஊசிகளை செருகுவதன் மூலம் வலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான அல்லது நோயை குணப்படுத்துவதற்கான மருத்துவ முறையாகும். உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை நேர்நிலைக்கு கொண்டுவந்து ஆரோக்கியத்தைத் தரக்கூடிய மருத்துவ முறையாக அக்குபஞ்சர் கருதப்படுகிறது. இந்த ஸ்டைலில் இந்த வாக்கிங் ட்ராக் அமைக்கப்பட்டுள்ளது. எனவே வாங்கிங் செல்லும்போது அக்குபஞ்சர் சிகிச்சையும் ஒரே நேரத்தில் பொதுமக்கள் பெற முடியும்.
3 கி.மீட்டர் துார வாக்கிங் டிராக் மட்டுமின்றி, வனத்தில் 32 சிறிய தங்குமிடங்கள் அமைக்கப்பட உள்ளது. வாங்கி முடிந்த பிறகு இங்கு, வந்து காபி, தேனீர் அருந்தி தங்களை உற்சாகப்படுத்தி கொள்ள முடியும். சுற்றுலா பயணிகளும் இங்கு தங்க முடியும். இன்னும் ஒரு மாதத்திற்குள் ரெடியாகி விடும் என்றனர். மூங்கில் குகைகள், அதில் படர்ந்து வரவேற்கும் கொடிகள், அருமையான இயற்கை சூழல், மூலிகை நிறைந்த தாவரங்கள் என காட்டில் வாக்கிங் செல்லுவது இனிய அனுபவத்தை இனி, புதுச்சேரிவாசிகள் இங்கேயே பெறலாம்.

