ADDED : ஜூன் 13, 2025 03:32 AM
பாகூர்: கிருமாம்பாக்கம் அடுத்த மதிகிருஷ்ணாபுரம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் நடராஜன், 55. இவரது மனைவி செல்வி, 44. இரண்டு மகள்கள் உள்ளனர். நடராஜன் கேரளாவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் அந்த வேலையை விட்டு, சொந்த ஊருக்கு திரும்பிய அவர், பாகூர் கன்னியகோவில் ரோட்டில் உள்ள தனியார் மரவாடியில் உதவியாளராக பணி செய்து வந்தார்.
இதனிடையே, நடராஜன் தனக்கு தோள்பட்டையில் வலி இருப்பதாக வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் வழக்கும் போல், நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று உள்ளார். அங்கு திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.
புகாரின் பேரில், பாகூர் போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.