ADDED : நவ 16, 2026 05:48 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: அதிகமாக மது குடித்த கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தேவபாலன், 67; கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர் நேற்று (நவ.,15) மாலை அதேபகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அதிகமாக மது குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
