/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உலக டவுன் சிண்ட்ரோம் தின விழிப்புணர்வு
/
உலக டவுன் சிண்ட்ரோம் தின விழிப்புணர்வு
ADDED : மார் 24, 2025 04:22 AM

புதுச்சேரி: புதுச்சேரி, ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், தி ஹன்ஸ் பவுண்டேஷன் சார்பில்,உலக டவுன் சிண்ட்ரோம் தினத்தை முன்னிட்டுவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மருத்துவ மேற்பார்வையாளர் அய்யப்பன், ரெசிடென்ட் மருத்துவ அதிகாரி ரொசாரியோ, பொது தொடர்பு அலுவலர் குரு பிரசாத், மாநில நோடல் அதிகாரி சரவணன், பீடியாட்ரிக் துறை தலைவர் அனுராதா, டாக்டர் மீனா ஆகியோர் டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளின் தனித்துவம், உள்ளடக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி, செல்பி பூத் அமைத்தனர்.
இதையடுத்து, தி ஹன்ஸ் பவுண்டேஷன் திட்ட மேலாளர் ரீனு பீட்டர் மற்றும் குழுவினர் பிளேவியோ ரோஷன், ஷலேஹா, ஸ்ரீமஞ்சுலா, ரம்யா நரேன் ஆகியோர், செல்பி பூத்தில் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் டவுன் சிண்ட்ரோம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், மதர் தெரேசா பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி நிறுவன இறுதி ஆண்டு பி.பி.டி., மாணவர்கள், டவுன் சிண்ட்ரோம் குறித்த முக்கிய தகவல்கள் அடங்கிய அட்டவணையை உருவாக்கி, பொதுமக்களுக்கு வழங்கினர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி டவுன் சிண்ட்ரோம் உள்ள நபர்களின் தனித்துவத்தை ஊக்குவிப்பதற்கும், கொண்டாடுவதற்கும் நடத்தப்பட்டது.