/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்துறை காலி பணியிடங்களுக்கு 5 மையங்களில் இன்று எழுத்து தேர்வு
/
மின்துறை காலி பணியிடங்களுக்கு 5 மையங்களில் இன்று எழுத்து தேர்வு
மின்துறை காலி பணியிடங்களுக்கு 5 மையங்களில் இன்று எழுத்து தேர்வு
மின்துறை காலி பணியிடங்களுக்கு 5 மையங்களில் இன்று எழுத்து தேர்வு
ADDED : ஜூன் 08, 2025 04:02 AM
புதுச்சேரி : மின்துறையில் உள்ள இளநிலை பொறியாளர் காலி பணியிடங்களுக்கு, 5 மையங்களில் இன்று எழுத்து தேர்வு நடக்கிறது.
புதுச்சேரி மின்துறையில் உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று 8ம் தேதி 5 மையங்களில் நடக்கிறது. இத்தேர்வின், முதல் தாள் காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது. இரண்டாம் தாள் தேர்வு, மதியம் 2:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடக்கிறது.
இந்த தேர்வை 902 பேர் எழுதுகின்றனர். தேர்வு எழுதுபவர்கள் ஹால் டிக்கெட்டுடன், ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான்கார்டு, ஏதாவது ஒன்றை அசலை எடுத்து செல்ல வேண்டும். ஹால் டிக்கெட்டை, https://recruitment.py.gov.in இணை தளத்தில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், விபரங்களுக்கு 0413 - 2233336 இந்த எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என, நிர்வாக சீர்திருத்ததுறை, சார்பு, செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.